Monday, 23 September 2013

நீ உதிர்க்கும்
கோபமா?” எனும்
ஒற்றைப் பதம்
சற்றுமுன் நிகழ்ந்த
வார்த்தை யுத்தத்திற்கான
வெள்ளைக்கொடியாய்
அசைகிறது நம் முன்....
சூழும்
முத்தப்போர்
மேகமாகவும்....!

Thursday, 5 September 2013

A.R ம் அலைபாயுதேவும் பின்னே ஞானும்...




                 ஒரு பெருநகரின் குறுக்கே சதா தடதடத்து ஓடும் எந்திரமலைப்பாம்பாக மின்சார ரயிலும் அதன் மீதான பயணங்களும் அங்கே துளிர்விடும் மெல்லிய காதலும் காதலர்கள் கைகோர்த்தபின் ஏற்படும் மனவிலக்கமும் அதற்கான தீர்வுமே பட்த்தின் மையநீரோட்டமாக நமை  நனைத்துச்செல்கிறது.அலைபாயுதேவின் அனைத்துப்பாடல்களும் அட்டகாசம்.ரோஜாவை A.R திரையிசையில் நுழைந்த புயல் போன்ற நிகழ்வெனக்கொண்டால்,திருடா திருடாவை இசைக்கோர்வையில் நிகழ்த்திய புதுமை எனக்கொண்டால்,Dilse இசையை,இணைவதற்குச் சாத்தியமேயில்லாத இரு ஜீவன்களின் காதலையும்,அவர்களுக்கிடையே நிகழும் உணர்வுப்பரிமாற்றங்களையும் சூஃபிஸ்ம் டச்சோடு பிரதிபலித்து நமை உன்மத்த நிலைக்கு அழைத்துச்செல்லும் ஒலிக்கோர்வை எனக்கொண்டால்,Delhi-6 இசையை ஒரு நகரத்தின் குறுக்கே ஊடும்பாவுமாக நெய்யப்பட்டிருக்கும் கலாச்சாரத்தின் பாரம்பரிய இசையைப் பின்புலமாக வைத்து இரு இணைமனங்களுக்கிடையே முகிழ்க்கும் பிரியத்திற்கான இசையை வண்ணக்கலவையாகக் கொண்டு தீட்டப்பட்ட இசை ஓவியாமாகக் கருதினால், Rangde Pasanti - ஒரு தேசத்தில் புரையோடியிருக்கும் ஊழலின் கரையை,ஒரு வீரவரலாற்றின் மூலம் கிளர்ந்தெழும் உத்வேகத்தின் துணைகொண்டு  துடைக்க முயலும் இளைஞர்களுக்கான புரட்சியின் இசை எனக்கொண்டால்,சங்கமம் இசையை கிராமிய இசைக்கான அசல் முகத்தை அதன் அடர்த்தியை, அதன் எதிர்அளவுகோலாக கர்னாடக இசையைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட அரங்கேற்றமாய்க் கொண்டால்,அலைபாயுதே இசையானது அன்பில் தோய்ந்த ஈர் இதயங்களுக்கிடையேயான காதலையும்,இணைவையும்,ஊடலையும்,கூடலையும் பிரதிபலிக்கும் விதமாக ,குற்றால சீஸனில் அடிக்கும் சாரல்மழையுடன் கூடிய தென்றலின் வருடலென வரையறுக்கலாம்.

             
முதலில் பச்சை நிறமேங்ற Enthusiastic song  start பண்ணலாம்.அவ என்னப்பார்த்துட்டா  என்னப்பாத்துச் சிரிச்சுட்டா(J) என காதலன் தன் காதலியின் கண்களில் காதலுக்கான முதல் தடயத்தை உணர்ந்தவுடன் கொள்ளும் குதூகலத்தில் தொடங்குகிறது.ஆரம்பமே ஒரு புல்லாங்குழலின் புன்னகையோடு பூக்கிறது.பாடல் நெடுக அதன் மதுரப்புன்னகை தான்.கூடவே சந்தோஷத்தின் கோரஸ்.பூமி தொடாஆ பிள்ளையின் பாதத்தோடு ஆர்ப்பரித்துப் பாய்கிறது வயலின் இசை அருவி.ஹரிஹரனின் குரலில் உள்ள மகிழ்ச்சியின் மென்மை நமைத்தொற்றிக்கொள்வதில் யாதொரு ஆச்சர்யமுமில்லை.வரிகள் வைரமுத்து சொல்லவாவேண்டும். காதலின் வெற்றியை வெகு அண்மையில் உணர்ந்த ஒரு காதலனின் வெற்றிக்களிப்பைச் சொல்லும்விதமாக ப்ரபஞ்ச வண்ணக்கலவையைக் காதலியின் ப்ரத்யேக நிறச்சேர்க்கையோடு ஒப்பிட்டு எழுதிச்செல்கிறார்.மயில் கழுத்து நீலம்,காக்கைச்சிறகின் நிறம்,குவளைப்பூவில் குழைத்த வண்ணம் என ஒவ்வொரு வரியும் வர்ணனையும் ஒப்பீடும் கவித கவித.கடைசியில் வெள்ளை மன்சுக்காரியில் நிகழ்கிறது ஒரு Excellent Poetical touch.P.C.Shriram ன் ஒவ்வொரு காட்சிக்கோணமும்ம் குளுமை நிரம்பி நம் கண்களில் பனிப்பொழிவு நிச்சயம்.காட்சிகளையும் வரிகளையும் இணைக்கும் bonding agent ஆக திகழ்வது இசையே.(Like cement in concrete)

    அடுத்து எவனோ ஒருவன்..My Favorite.அப்பயிருந்து இப்ப வரைகும் இந்தப்பாட்டின் மீதான மயக்கம் தீரவில்லை.



பாட்டோட BACKDROP என்னன்னா கடவுளின் சொந்த தேசத்திற்கு (கடவுளின் சொந்த தேசம் தான் ஆனா இருக்றவன் ஃபுல்லா சாத்தான் டே – ஒரு மலயாள சினிமாவில் வந்த ஜோக்) கடவுளின் அண்டைதேசத்திலிருந்து(!)காதலியைத்தேடிச் செல்லும் காதலன்.கூடவே பொழியும் பெருமழை.இடி மின்னல்.புயல் காற்றடிக்கும்.அதுக்கேத்த மாதிரி ARABIC FUSION இசைக்கப்படும்.கோரஸ் வழிந்தோடும்.பாடல் வரிகளும் இசைக்கு சளைத்ததல்ல ஒரு ஆழமான METHPHOR ஐத்தொட்டுச்செல்லும். சொர்ணலதாவின் மென்குரலில் சோகம் இழையும்..இந்த ஏ.ஆர். ஒரு சம்பவமாணு கேட்டோ...அந்த டைம்ல ஒரு அழுத்தமான சோகப்பாட்டுக்குப் பாடணும்னா ஏ.ஆர் உடனே கூப்பிடுவது சொர்ணலதா மேடம தான்.இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோனு வேற யாராலும் இப்படி உருக முடியுமா?.அந்த கண்ண்களை வருடும்.... கண்ண்களை வருடும்..... கண்ண்களை வருடும்......... ங்ற இடத்த மட்டும் கரத்தி கரத்தி ஆயிரம் தடவ கேட்கலாம்.சொர்ணலதாவின் Magic Tone.A.R’S Magic Touch!.பாடல் வரிகளிலும் இசையிலும் புல்லாங்குழல் நம்முடன் பயணித்துக் கொண்டேயிருக்கும்.புல்லாங்குழல் அழுது கேட்டிருக்கிறீர்களா?இல்லையென்றால்.....இந்த பாட்டின் கடைசில கேட்கலாம்.கூடவே மனதின் கரைதல் ஒலியும்   
....
           அடுத்து சாதனா சர்கம் Entry .சினேகிதனேனு அந்த ஒற்றைச் சொல்லின் உச்சரிப்புக்கும் அந்த அனுசரணையான த்வனிக்குமே இந்த NATIONAL AWARD COMMITTEE ஒரு அவார்ட அவங்க வீட்டுக்கு பார்சல் அனுப்பிருக்கலாம்.(But missedL) அவ்வளவு துல்லியம்.அவ்வளவு நெகிழ்வு.அவ்வளவு குழைவு.கடற்கரையில் நிகழும் சந்திப்பு,வருகையில் தாமதம்,அதனாலேற்படும் அவசரம்,இறுதியில் ஒரு முத்தத்தோடு துவங்குகிறது பாட்டு.சிம்ப்ளா சொன்னா மொத்தப் பாடலே காதலனுக்கு காதலி அன்போடு அளிக்கும் செல்லக் கோரிக்கைகளின் தொகுப்பு எனலாம். இடைல ஒரு STANZA கர்வம் அழிந்ததடின்னு முடியுது.அந்த கர்வம் அழியுறதுலதான் காதலே தொடங்குதுன்னு நெனைக்றேன்.நான் ஐ இழப்பது தான் ஆன்மீகத்தின் தொடக்கம்னு சொல்வாங்க.அது துறவிகளுக்கு வேண்டுமானால் சாத்தியம்.ஆனா உலகியல் நிகழ்வுகள்ல நான்என்கிற தன்முனைப்பை என்னைக்கும் விடக்கூடாது.விட்டா நம்ம தலை மேலேயே ஏறி மழிக்கப்படுகிறோம்ங்ற எண்ணமே தோன்றாதவாறு கூர்மையான் சவரக்கத்தியால் ஸ்மூத்தா மொட்டையடிச்சிட்டு அது மேல தபேலாவும் வாசிச்சுருவாய்ங்க(இது இசை குறித்தான பதிவு என்பதை நினைவிற்கொள்க).அதனால உள்குத்து, வெளிக்குத்து,எல்லாவற்றையும் விளக்கெண்ணெய் ஊற்றியாவது உற்றுநோக்கினால் தான் விளங்கித் தொலையும்.ஆனா இந்தக் காதல்ல கர்வம் களைவது சாலச்சிறந்ததுன்னு இந்த வரிகளில் நிறுவப்படுகிறதுகர்வம்களைதலைத்தான் அந்த வீட்டுஓனர் அற்புதமாகச் சொல்லிச்செல்வார் விட்டுகொடுத்தலெனவும்,பொறுத்து கொள்ளுதலெனவும் தத்துவார்த்தமாக(பூ,கவர்ச்சி-காதல் B.M.வேர்,பிடிப்பு- காதல் A.M J)சூப்பர்!



          ஷாலினியோட Characterization அ பத்தி சொல்லியே ஆகணும். மணிரத்னம் படத்துல ஹீரோயின்னா ஒரு துறு துறு இருக்கணுமே.same here.அந்த எவனோ ஒருவன் ending ல ஏன் வாரதுக்கு இவ்ளொ லேட்டு..(???!!! சொல்லவேயில்லJ).தேடிச்செல்தல் ஆண்கள்ட தான் தொடங்கணுமாம்.அதான் Universal Design னு  நெனைக்றன்.Ovum அ தேடிப்போற Sperm மாதிரி!.அப்றம் அந்த Proposal Scene.ஐ லவ் யூ...(Background ல தடக் தடக்)அப்டினா என்ன மீன் பண்ர..(..தடக் தடக்)....உனக்காக என்னவேணாலும் செய்வன்..(தடக் தடக்..)..எனக்காக ட்ரெய்ன்லயிருந்து குதிப்பியா..(.எவ்ளொ நக்கல்).(தடக் தடக் சத்தம் வலுக்கிறது).அதாவது சமகால மாந்தர்கள் சூடியிருக்கும் பாசாங்கு மற்றும் போலிபாவனை மீதான கேள்வி எழுப்புதல்.யதார்த்தவாதி.அதுக்கு நம்மாளு ஹி ஹினு.அசட்டுச்சிரிப்பு தான் பதில்..வேற வழி..குதிக்கவா முடியும்..(யதார்த்தம் J)....ஆனா அந்த Breakup scene ல என் வீடு,அப்பா அம்மா,நாய்க்குட்டிய பிரிஞ்சு வர முடியாதுன்னு சொல்வாங்க.அந்த நாய்க்குட்டி உச்சரிப்பில் ஒரு பக்குவப்பட்ட பெண்ணின் கண்களில், உள்ளே இன்னும் உயிர்ப்புடனிருக்கும் ஒரு சிறுமியின் முகம் மின்னி மறையும்.அதுவும் சமூக யதார்த்தம்தான்.


           அடுத்து ஆரம்பத்தில வரும் என்றென்றும் புன்னகை பாடல்.கனவு Project கையில் கிட்டிய சந்தோஷத்தில் வீடு திரும்பும் கணவன். பிஜிஎம் ல் ஒலிக்கிறது இந்தப் பாட்டு.[இது ஒரு நான்–லீனியர் திரைக்கதை அமைப்பைக்கொண்ட சினிமா ஆதலால் அதே சமயத்தில் நிகழும் இன்னொரு நிகழ்வினைபற்றிய காட்சி இறுதியில்தான் காட்டப்படுகிறது.தன் கணவன் அவ்ளோ கெட்டவன் இல்ல கொஞ்ச நல்லவந்தான்(ரோஜா!-அந்தப்பட்த்துல இந்த டயலாக்ல வார பிஜிஎம்....வாவ் ..அற்புதம்லாம் குறைவான வார்த்தை.) எனத் தெரிந்த மகிழ்ச்சியில் சாலையைக் கடக்க நிற்கும் மனைவி.]
 Hey!! Here We Go I Revved Up On The Marches Singing With The Hip-the-hop  Once Again In Effect Feel The Constant Slamming Of The Bassline Never Mess Around With The Funk Because I’m Sticking Kicking Always Finger Lickin I Dont Need Halloween  Just To Be Trick Or Trippin Cause I’m Always On Top Ki Wiggudu Waggudu Jiggudu Joganna Hey Wassup !! என்றென்றும்....எப்புடி ஹிப்-ஹாப்பு......எந்த ஒரு தளர்வான நிமிடத்திலும் பாட்டப் போட்டு விட்டு சவுண்ட் கூட்டிட்டா என்றென்றும் புன்னகைன்னு சத்தமா பாடிட்டே வானத்தில் பறக்கலாம்.அவ்ளோ எனர்ஜி சாங்ல ...

ஆனா படத்துல...அந்தச் சாலையின் ட்ராஃபிக்கின் காரணமே தன் மனைவிக்கேற்பட்ட விபத்துதான்னு தெரியாமல் கடக்கிறான்.எப்டி இருக்கும் பாருங்க.அப்றம் மனைவியக் காணோம்னு நகரமெங்கும் தேடியலைகிறான்.ஒரு பக்கம் வேலை சார்ந்த சந்தோஷம்.மறுபக்கம் மனைவியின் வீடுதிரும்பாத வருத்தம்.வாழ்க்கை இப்டித்தான் வேறு வேறு வடிவில் மாயாஜாலங்களை நிகழ்த்துமL  என்றென்றும் புன்னகைகளுக்குப்    பின்னாலான
ஏற்க இயலா நிகழ்வுகள் மனித்வாழ்வின் அவிழ்க்க இயலா முடிச்சுகளாக
என்றென்றும் இறுக்கியபடியேதான் நம் உலகு நகர்கிறது.அளப்பரிய ஆனந்தத்தில் திளைக்கும் ஒருவனின் உலகில் ஓர் அடர்ந்த துயரத்தின் நிழல் படரக் காத்துக்கொண்டிருக்கும் கொடிய கணத்தைத்தான் மிகமிகத் துல்லியமாகத் திரைப்படுத்துகிறது(project) இந்தக்காட்சி.வாழ்க்கையின் புதிரே அது நம் வெளியை அதிகாலைப்பனிபோல் தெளிவற்றதாகக் காட்சிப்படுத்துவதுதான்.கொஞ்சம் பொறுமயா அடுத்த முயற்சி எடுத்தால் பரிதி முன் பனி போல நம் பிரச்சினையின் உண்மை வடிவம் துலங்கி தீர்வை எட்டலாம்.தெளிவு பிறக்கலாம்.அதனால என்ன நடந்தாலும் ஒண்ணுமில்லடா சுனாபானானு மீசைய முறுக்கீட்டே கெம்பீரமா போய்ட்டேயிருக்கணும்:-)....




      அடுத்து அந்த ஹாஸ்பிடல் சீன்...ஆக்ஸிடண்ட் பண்ணவன் மீதுள்ள கோபம் அதே சமயம் அவன் மனைவியின் மீது பொழியும் பாசம்Though she is the one made acc...தன் குடும்பவாழ்க்கையில் எது குறைகிறதென்று கண்டுகொள்கிறான்.Last scene லயும் அந்த ட்ரெய்ன்லயிருந்து குதிப்பியாங்ற டயலாக் வரும்.Classic Scene .லாஸ்ட்ல பொண்டாட்டி போய்ட்டா ஜாலியா இருக்கலாம்னு நெனச்சியானு சொல்வாங்க.எல்லாருடைய முகத்திலும் ஒரு சிறு புன்னகை.இந்த மாதிரி இறுக்கமான தருணங்களில் ஒரு மிகையில்லாத கேலி தேவையாகயிருக்கிறது,அந்த இறுக்கத்தைத் தளர்த்த.
கணவன் மனைவிக்கிடையே ஊடல் நீங்க ஒரு முத்தம் போதுமானதாகயிருக்கிறது.நண்பர்களுக்கிடையெ மனக்கசப்புகள் நீங்க ஒரு கைகுலுக்கல்,ஒரு தோள்தொடுதல் நிகழவேண்டியிருக்கிறது.உறவுகளிடையே உள்ள வெற்றுப்பகைமை நீங்க சிலசமயம் ஒரு மன்னிப்புக்கோரல்,ஒரு மன்னித்தல்,ஒரு புன்னகை மலர்தல் அவசியாமாகயிருக்கிறது.இந்த Balance(அ)Equilibrium கைகூடிவிட்டால் என்றும் என்றென்றும் புன்னகை தான்.சுபம்J.