உன் நிலைத்தகவலை விரும்ப
ஆசையாகயிருக்கிறது
அதேசமயம் பயமாகவும்.
எனைப்பற்றியான பிம்பங்கள்
உடைந்துவிடக்கூடுமென்ற
பதைபதைப்பும் கூட.
இருந்தும்
மொழியைக் கையாளும் உன் லாவகமா?
சொற்களில் த்வனிக்கும் ஓசைநயமா?
சொல்லவந்த கருத்தினில் உள்ளுறையும் அறமா?
அவை உதித்த இதயம்மீதான ப்ரியமா?
எதுவோ ஒன்று
என் நெஞ்சில் விழுந்து
மெளசையும் அழுத்திவிடுகிறது
Like ல்.....
No comments:
Post a Comment